தமிழ்நாடு செய்திகள்

அமித் ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு

Published On 2025-02-20 11:30 IST   |   Update On 2025-02-20 11:55:00 IST
  • தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்.
  • அமித் ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தி பேசியும் மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 25-ல் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News