தமிழ்நாடு செய்திகள்

காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

Published On 2025-06-30 16:16 IST   |   Update On 2025-06-30 16:18:00 IST
  • நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
  • காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதால் அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் குமார் என்ற வாலிபரை, நகை திருட்டு புகார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் கடுமையாக அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிற. லாக்-அப் டெத் காரணமாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் அஜித் மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News