தமிழ்நாடு செய்திகள்
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
- முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.