தமிழ்நாடு செய்திகள்

ரெட் அலர்ட் எதிரொலி- நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2025-08-04 20:50 IST   |   Update On 2025-08-04 20:50:00 IST
  • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News