தமிழ்நாடு செய்திகள்

சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பதவியில் இருந்து சதாசிவம் நீக்கம் - ராமதாஸ் அதிரடி

Published On 2025-06-23 12:49 IST   |   Update On 2025-06-23 12:49:00 IST
  • அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
  • ராஜேந்திரன் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டிவனம்:

சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சதாசிவம் எம். எல்.ஏ.நீக்கப்பட்டுள்ளார்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நீடிக்கிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது.

அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின்போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப் பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார்.

அதிலும் குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த சதாசிவத்தை டாக்டர் ராமதாஸ் இன்று பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு பதிலாக ராஜேந்திரனை புதிய மாவட்ட செயலாளராக நியமித்து உள்ளார்.

நீக்கப்பட்ட சதாசிவம் மேட்டூர் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. ஆவார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் பல்வேறு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது எந்த கூட்டத்திலும் சதாசிவம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News