தமிழ்நாடு செய்திகள்

காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ள 6 மாவட்டங்கள்...

Published On 2025-06-11 07:21 IST   |   Update On 2025-06-11 07:21:00 IST
  • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
  • சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News