தமிழ்நாடு செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவருக்கு வணக்கம்- ராகுல் காந்தி

Published On 2024-12-06 10:50 IST   |   Update On 2024-12-06 11:27:00 IST
  • அம்பேத்கரின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி.
  • பாபாசாகேப்பின் அரசியலமைப்பு, நாட்டு மக்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும்.

புதுடெல்லி:

சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில்,

பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி.

சமூக சமத்துவம், நீதி மற்றும் உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான பாபாசாகேப்பின் அரசியலமைப்பு, நாட்டு மக்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும் - அதை பாதுகாப்பதில் நான் எப்போதும் உறுதியுடன் இருக்கிறேன்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவருக்கு எனது வணக்கம்.

ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 



Tags:    

Similar News