தமிழ்நாடு செய்திகள்
வாயு கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
- மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பள்ளியில் அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த 3 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு, உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பள்ளியில் அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில், திருவொற்றியூர் விக்டரி பள்ளிக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போலீசார், அறிவியல் வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரில் ஆய்வு செய்தனர்.