தமிழ்நாடு செய்திகள்

ஏற்காடு கோடை விழாவுக்காக தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடுகள் தீவிரம்

Published On 2025-02-17 10:27 IST   |   Update On 2025-02-17 10:27:00 IST
  • ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம்.
  • ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

ஏற்காடு:

ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். தாவரவியல் பூங்காவில் டேலியா, பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு ஆகிய மலர் விதைகள் நூற்றுக்கு மேற்பட்ட தொட்டியில் நடவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் மட்டும் 3 ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதனால் தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன.

எனவே கோடை விழா தொடங்கும்போது, நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். இதில் பூக்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News