தமிழ்நாடு செய்திகள்
காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு
- இன்று 2 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் சசிகாந்த் செந்தில் ஈடுபட்டு வருகிறார்.
- மத்திய அரசின் இந்த அயோக்கியத்தனமான நடத்தைக்கு எதிராக குரல் எழுப்புவோம்
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து இன்று 2 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில்| ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சசிகாந்த் செந்தில் அவர்களே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இது அரசியல் பற்றியது அல்ல.. கல்வி உரிமை மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.. மத்திய அரசின் இந்த அயோக்கியத்தனமான நடத்தைக்கு எதிராக குரல் எழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.