தமிழ்நாடு செய்திகள்

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வீட்டின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு..!

Published On 2025-06-14 16:32 IST   |   Update On 2025-06-14 16:32:00 IST
  • ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. வீடு பூந்தமல்லியில் உள்ளது.
  • திடீரென இன்று மதியம் அவரது வீட்டின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி. இவர் கே.வி. குப்பம் தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாக உள்ளார். கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து போட்டியிட்டார்.

இவரது வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திடீரென அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து புரட்சி பாரதம் கட்சித் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளார். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News