தமிழ்நாடு செய்திகள்
லாரி ஏறி பள்ளி சிறுமி பலி - கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்
- பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.
- விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.
சென்னை பெரம்பூரில் நேற்று லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.
* பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் இருக்க வேண்டும்.
* விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.
* காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.