கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
- கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
- கோவிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
திருச்சியில் ரோடு ஷோவை முடித்துக்கொண்டு, விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார்.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வரை 2 கி.மீ. தூரம் ரோடு ஷோவாக புறப்பட்டு சென்றார். அப்போது சாலையில் இருபுறமும் திரளாக கூடி நின்ற மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பொன்னேரியிலிருந்து கோவில் வளாகம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க., அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
கங்கை கொண்ட சோழபுரம் வந்தடைந்த பிரதமர் மோடி, தமிழர்களின் பழமையான நாகரிகத்தை எடுத்துரைக்கும் வகையில் உள்ள வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். சோழர்களின் கட்டிடக்கலை, நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தார்.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள சுவாமிக்கு வாரணாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரால் பிரதமர் மோடி அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார்.
கலைநயத்துடன் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் அழகை வியந்து ரசித்தார்.