தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.