தமிழ்நாடு செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் உடன் இருக்கும் புகைப்படம் - பாஜக நிர்வாகி விளக்கம்

Published On 2025-06-28 14:31 IST   |   Update On 2025-06-28 14:31:00 IST
  • பிரதிப் உடன் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலாக பரவியது.
  • பிரதிப் குமார் உடனான தொடர்ப்பு குறித்து வினோஜ் பி செல்வம் விளக்கமளித்துள்ளார்.

சென்னை மாநகரில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நுங்கம்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியான பிரசாத் மற்றும் அவரது கூட்டாளி பிரதீப் ஆகியோர் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த மற்றும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதிப் குமார் உடன் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், பிரதிப் குமார் உடனான தொடர்ப்பு குறித்து வினோஜ் பி செல்வம் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "ஒன்றாக படிக்கும்போது எனக்கும் பிரதீப்பிற்கும் பழக்கம் ஏற்பட்டது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை பேஸ்புக்கில் எங்கள் நாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளது. அது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படத்தை எடுத்து எனது பெயரை இணைப்பது வேடிக்கையாக உள்ளது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News