பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை - பொது சுகாதாரத்துறை
- கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
- அரசு சார்பில் முகக்கவசம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2020-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.
நடப்பாண்டில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் அணிய வேண்டும் என தகவல் பரவிய நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
* கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
* பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. அரசு சார்பில் முகக்கவசம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
* வீரியம் இ ல்லாத கொரோனா என்பதால் நோய் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.