ஆலப்புழாவில் சக்குளத்து பகவதியம்மன் கோவிலுக்கு ஓ.பி.எஸ். பயணம்
- செங்கோட்டையன் டெல்லி செல்கிறாரா அல்லது ஹரித்துவார் செல்கிறாரா என எனக்கு தெரியாது.
- இந்த முறை தனது இளையமகன் ஜெயபிரதீப்புடன் ஆலப்புழா செல்வது குறிப்பிடத்தக்கது.
போடி:
தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
சந்திரகிரகணம் நல்ல முறையில் முடிந்தது. இதனால் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சக்குளத்துக்காவு பகவதியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்கிறேன். திரும்பி வந்த பிறகு உங்களை சந்திக்கிறேன் என்றார்.
செங்கோட்டையன் டெல்லி செல்கிறாரா அல்லது ஹரித்துவார் செல்கிறாரா என எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் பலர் கட்சியை தவிடு பொடியாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என எடப்பாடி கூறியது குறித்து கேட்டதற்கும் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
வழக்கமாக ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குலதெய்வ கோவில் உட்பட சபரிமலை கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை தனது இளையமகன் ஜெயபிரதீப்புடன் ஆலப்புழா செல்வது குறிப்பிடத்தக்கது.