கரூர் பெருந்துயரம்: ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமா மாலினி தலைமையில் குழு அமைத்தது பாஜக
- கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் திடீர் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது.
- கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், நேற்று முன்தினம் கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். அரசியல் தலைவர் ஒருவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் இதுபோன்று அதிக மக்கள் உயிரிழந்தது கிடையாது. இதனால் பெருந்துயர நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு ஒருநபர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை கேட்டுள்ளார்.
இந்த நிலையில், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவை ஹோமா மாலினி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.
இந்த குழு கரூர் மாவட்டம் சென்று, சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பாஜக தேசியை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார் என பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது
பாஜக அறிவித்துள்ள குழுவில் இடம் பிடித்துள்ள எம்.பி.க்கள் விவரம்:-
1. ஹேமா மாலினி (தலைவர்), 2, அனுராக் தாகூர், 3. தேஜஸ்வி சூர்யா, 4. பிரஜ் லால் (DGP), 5, ஸ்ரீகாந்த் ஷிண்டே (Shiv Sena), 6. அப்ரஜிதா சாரங்கி, 7. ரேகா ஷர்மா, 8. புட்டா மகோஷ் குமார் (TDP)