தமிழ்நாடு செய்திகள்

நவீனமயமாகும் மந்தைவெளி பேருந்து முனையம்

Published On 2025-06-12 09:22 IST   |   Update On 2025-06-12 09:22:00 IST
  • தரைத்தளத்திலிருந்து 7-வது தளங்கள் வரை சில்லறை விற்பனைக்கூடங்கள், ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
  • சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் ரூ.151 கோடியில் மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னை மந்தைவெளி பேருந்து முனையம் சில்லறை, வணிக வளாகத்துடன் நவீனமயமாக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் ரூ.151 கோடியில் மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது.

கோபுரம்-A:

* இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 184-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.

* தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை வணிக / அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளன.

கோபுரம்-B:

* இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 318 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.

* தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை சில்லறை விற்பனை இடங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைய உள்ளன.

Tags:    

Similar News