தமிழ்நாடு செய்திகள்

பாரதிதாசன் பல்கலையில் பயின்ற மாணவர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளனர் - மு.க.ஸ்டாலின்

Published On 2025-10-27 11:36 IST   |   Update On 2025-10-27 11:36:00 IST
  • பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது.
  • உயர்ந்த சிந்தனை தான் வெற்றி பெற உதவும். நேர்மை தான் அறிவை அளவிட உதவும்.

பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள்.

* பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது.

* பாரதிதாசன் பல்கலையில் பயின்ற மாணவர்கள் சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

* உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

* ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இன்று படித்து முன்னேற காரணம் திராவிட இயக்கம்.

* உயர்கல்விக்கு என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி.

* கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

* உலகம் எந்த வேகத்தில் மாற்றமடைகிறதோ அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து நாமும் ஓட வேண்டும்.

* தலைமைத்துவம் என்பது ஒருவர் ஏற்படுத்தும் தாக்கம் தான்.

* அடுத்து நடக்கப் போவதை கவனிப்பவர்கள் தான் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும்.

* சிறப்பான திட்டமிடல் இல்லாமல் எந்த செயலிலும் இறங்க கூடாது என்கிறார் வள்ளுவர்.

* எங்கு சென்றாலும் அன்போடு, அறத்தோடு செயல்பட வேண்டும்.

* சோதனையான காலத்திலும் நேர்மை, நம்பிக்கை, பொறுமையை கைவிட கூடாது.

* உயர்ந்த சிந்தனை தான் வெற்றி பெற உதவும். நேர்மை தான் அறிவை அளவிட உதவும்.

* வெற்றி பெறும் மாணவர்கள் தங்களுக்கு பின்னால் படித்து வரும் மாணவர்களை கைதூக்கி விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News