தமிழ்நாடு செய்திகள்

எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க தயார்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-13 11:35 IST   |   Update On 2024-12-13 11:35:00 IST
  • கனமழையை முன்னிட்டு அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
  • மீட்பு பணிக்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தென்காசிக்கு சென்றுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* கனமழையை முன்னிட்டு அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

* மழையால் எவ்வளவு பாதிப்பு வந்தாலும் சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தயாராக உள்ளது.

* நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மழை பெய்துள்ளது.

* மீட்பு பணிக்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தென்காசிக்கு சென்றுள்ளார்.

* பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு தருவதற்கு தொடர்ந்து பத்திரிகையில் எழுதினாலே மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலையினை அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்ப்போம் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News