தமிழ்நாடு செய்திகள்

இந்தியாவின் உயர்வுக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும்- ப.சிதம்பரத்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2025-09-16 15:03 IST   |   Update On 2025-09-16 15:03:00 IST
  • தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர்.
  • ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் உயர்வுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விழைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News