தமிழ்நாடு செய்திகள்
மு.க.முத்து உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி
- மு.க.முத்துவின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மூத்த சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு மு.க.அழகிரி மாலை அணிவித்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.