தமிழ்நாடு செய்திகள்

ஆட்டோ கட்டணம் உயர்வு?- அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Published On 2025-02-18 12:52 IST   |   Update On 2025-02-18 12:52:00 IST
  • பைக் டாக்சிகளை வரைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்.

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆலோசனையின்போது, குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கவும் அனுமதி தரவும் வாடகை ஆட்டோக்களுக்கான செயலியை அரசு அறிமுகப்படுத்தவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பைக் டாக்சிகளை வரைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஓலா, உபேர் சேவைக்கு அரசு சார்பில் செயலி உருவாக்க கோரிக்கை விடுத்தனர்.

* சென்னையில் பைக் டாக்சிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கை குறித்து ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும்.

* முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News