தமிழ்நாடு செய்திகள்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர்கள்

Published On 2025-07-08 10:36 IST   |   Update On 2025-07-08 10:36:00 IST
  • கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
  • ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் மோதியதுடன் பள்ளி வேன் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்றதால் வேன் சுக்குநூறானது.

ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின் முழுமையான தகவல்களை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News