தமிழ்நாடு செய்திகள்

பிறை தெரிந்தது: 5-ந்தேதி மிலாடி நபி விழா- அரசு காஜி அறிவிப்பு

Published On 2025-08-25 08:53 IST   |   Update On 2025-08-25 08:53:00 IST
  • ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.
  • இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது.

சென்னை:

முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.

இந்த நிலையில், மிலாடி நபி விழா வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது. எனவே மிலாடி நபி விழா (இறை தூதர் முகமது நபி பிறந்தநாள்) வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News