தமிழ்நாடு செய்திகள்
ரெயில்வே அதிகாரிகள் நள்ளிரவில் ரெய்டு: தூங்கிக் கொண்டிருந்த 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட்..!
- கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதற்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம்.
- ரெயில்வே அதிகாரிகள் நள்ளிரவில ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட் கீப்பரின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கேட்கீப்பர் தூங்கிக் கொண்டிருந்ததால் ரெயில் வரும்போது, ரெயில்வே கேட்டை மூடவில்லை. இதனால் பள்ளி வேன் தண்டவளத்தை கடக்கும்போது விபத்து ஏற்பட்டது என குற்றம்சாட்டப்பட்டது. இதனால் கேட் கீப்பர் கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் நள்ளிரவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரண்டு கேட் கீப்பர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டறிந்தனர். அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.