தமிழ்நாடு செய்திகள்

நடப்பாண்டில் 7ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

Published On 2025-10-20 13:54 IST   |   Update On 2025-10-20 13:54:00 IST
  • அணைக்கு 14,420 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
  • 1500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகாரித்துள்ளது. இதனால் இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதன்மூலம் இந்த ஆண்டில் 7ஆவது முறையாக மேட்டூர் அணை 120 அடியான முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 14,420 கனஅடி நீர் வரும் நிலையில், 1500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News