தமிழ்நாடு செய்திகள்

மாரி செல்வராஜின் ஆகச்சிறந்த படைப்பு "பைசன்"- இயக்குனர் சேரன்

Published On 2025-10-23 19:40 IST   |   Update On 2025-10-23 19:40:00 IST
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த பிரபல இயக்குனர் சேரன் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சேரன் கூறுகையில்," பரியேறும் பெருமாளுக்கு பிறகு மாரி செல்வராஜ் தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு பைசன். நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது. கபடி விளையாட்டு என்பது பழக்கப்பட்டதுதான்.. ஆனால் அந்த கபடி வீரனை சுற்றியுள்ள உலகம் புதுசு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News