மனைவியின் கள்ளக்காதல் அம்பலமானதால் வாட்ஸ்அப்பில் குமுறலை பதிவிட்டு கணவர் தற்கொலை
- தனது மனைவியின் குடும்பத்தினரிடம் ஜான்சன் பாபு நியாயம் கேட்டார்.
- வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை தங்களிடம் வழங்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் கோகினூர் பங்களா அருகே உள்ள தனியார் பங்களாவில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தவர் ஜான்சன் பாபு (வயது 36). இவர் கொடைக்கானலைச் சேர்ந்த சசிரேகா என்பவரை காதலித்து கடந்த 10 வருடங்ளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் 3 பேரும் அந்த தனியார் பங்களாவில் வசித்து வந்துள்ளனர்.
இந்த பங்களாவில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப்பணிகள் நடந்து வந்துள்ளது. அப்போது பணிக்கு வந்த ஆதேஷ ஆண்டனி என்பவருடன் சசிரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சசிரேகாவை கேட்டும் அவர் விடாமல் ஆண்டனியுடன் பழகி வந்துள்ளார். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு செய்துள்ளார். இந்த சூழலில் கள்ளக்காதலனுடன் சசிரேகா நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் அவர்கள் இடையே பேசிய உரையாடல் குறித்த குரல் பதிவு ஆகியவை கணவர் ஜான்சன் பாபுவுக்கு கிடைத்துள்ளது.
இதனை வைத்துக் கொண்டு தனது மனைவியின் குடும்பத்தினரிடம் ஜான்சன் பாபு நியாயம் கேட்டார். ஆனால் அவர்கள் அந்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை தங்களிடம் வழங்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் உயிருக்கு பயந்த ஜான்சன் பாபு தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதற்கு முன்பாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு வாட்ஸ்அப்பில் தற்கொலைக்கான காரணம் குறித்த செய்தியை பதிவிட்டு அனுப்பிய பின் தற்கொலை செய்துள்ளார்.
ஜான்சன் பாபு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்ததும் உறவினர்கள் ஏராளமானோர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஜான்சன் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சசிரேகாவின் உறவினர்கள் மிரட்டலால்தான் ஜான்சன் பாபு தற்கொலை செய்து கொண்டதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. மதுமதி, வட்டாட்சியர் பாபு மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.