தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2025-05-27 13:17 IST   |   Update On 2025-05-27 13:17:00 IST
  • நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டர், மேல்பவானியில் 30 செ.மீட்டர் கனமழை பெய்துள்ளது.
  • இன்றும் நாளையும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டர், மேல்பவானியில் 30 செ.மீட்டர் கனமழை பெய்துள்ளது.

கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 21 செ.மீட்டர், நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் 18 செ.மீட்டர் கனமழை பதிவானது. தற்போது, தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது.

இந்தநிலையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதன் காரணமாக இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News