தமிழ்நாடு செய்திகள்

கவின் ஆணவக்கொலை வழக்கு: நீதிமன்றத்தில் முகத்தை மறைத்தபடி அழுதுக்கொண்டே ஆஜரான சுர்ஜித்

Published On 2025-08-07 14:47 IST   |   Update On 2025-08-07 15:01:00 IST
  • கவின் மற்றும் சுபாசினி என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
  • சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.

கவின் வேறு சமூகத்தை சேர்ந்த சுபாசினி என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாசினியின் தம்பி சுர்ஜித், கவினை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தார்.

இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கொலை நடந்த இடத்தில் இருந்து விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சுர்ஜித் முகத்தை மறைத்தபடி அழுதுகொண்டே சென்றார். 

கேமராக்களை பார்த்ததும் அழுத சுர்ஜித், நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற பின்னர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து சென்றார்.

Tags:    

Similar News