தமிழ்நாடு செய்திகள்
கலைஞர் பல்கலைக்கழகம் - சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்
- கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
- 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்.
சட்டசபை உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழகம் சட்ட முன்வடிவை சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேந்தராக கொண்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைகிறது. கலைஞர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார். 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.