தமிழ்நாடு செய்திகள்

தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த மாணவிகள் நீட் தேர்வு எழுத முடியாமல் சென்ற பரிதாபம்

Published On 2025-05-04 15:12 IST   |   Update On 2025-05-04 15:12:00 IST
  • நாடு முழுவதும் நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
  • சென்னை திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத 15 நிமிடம் தாமதமாக வந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

நாடு முழுவதும் நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை உள்பட 31 மாவட்டங்களில் சுமார் ஒன்றை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகி்னறனர்.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வில் பலத்த சோதனைகளுக்கு பிறகே மாணவர்கள் அனுமதித்தனர்.

இந்த நிலையில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த மாணவிகள் சிலர் நீட் தேர்வு எழுத முடியாமல் சென்ற நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ப்ரீத்தி என்ற மாணவி செய்யாறில் இருந்து 1.40 மணிக்கு வந்த நிலையில் மையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேரம் கடந்த காரணத்தால் தேர்வு எழுதாமல் மாணவி ப்ரீத்தி திருப்பிச் சென்றார்.

இதேபோல், சென்னை திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத 15 நிமிடம் தாமதமாக வந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனால், கதறி அழுத மாணவியை சமாதானம் செய்து சக மாணவர்களின் பெற்றோர் ஆறுதல் செய்தனர்.

Tags:    

Similar News