தமிழ்நாடு செய்திகள்

ரூ.2,500-க்கு மேல் துணி வாங்கினால் கூடுதல் ஜி.எஸ்.டி.யா?

Published On 2025-09-26 08:17 IST   |   Update On 2025-09-26 08:17:00 IST
  • ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
  • கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.

சென்னை:

கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது. அதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளது. குறிப்பாக கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.

அதே நேரத்தில் சில பொருட்களின் விலை சற்று அதிகரித்து இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள். ஏற்கனவே அதற்கு 12 சதவீத வரி இருந்தது. ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ரூ.2,500-க்கு மேல் ஒரு ஆடையின் விலை இருந்தால் அதற்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உண்மை நிலையை அறியாமல் பலரும் மொத்தமாக ஜவுளி வாங்கும்போது ரூ.2,500-க்கு மேல் பில் வந்தால் பிரித்து, பிரித்து பில் போட சொல்கின்றனர். அதாவது ரூ.2,500 விலை வருவதால் ஜி.எஸ்.டி.யை குறைக்க இதுபோல் செய்கின்றனர்.

தற்போது தீபாவளி பண்டிகைக்கு எல்லோரும் துணி எடுக்கும் வேளையில் கடைக்காரர்களுக்கு சிக்கலை தருகிறது.

இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறும்போது, ஒரு ஆடையின் விலை மட்டும் ரூ.2,500 மேல் இருந்தால் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம். மற்றப்படி அதற்கு கீழ் உள்ள தொகையில் மொத்தமாக எவ்வளவு மதிப்புக்கு ஆடை வாங்கினாலும் அதற்கு 18 சதவீதம் கிடையாது என்றனர்.

அதே போலபஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் குயில்ட் மெத்தைகள், கம்பளிகள் ஆகியவையும் பொருள் ஒன்று ரூ.2,500-க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் தான் வரி.

Tags:    

Similar News