தமிழ்நாடு செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Published On 2025-02-07 12:50 IST   |   Update On 2025-02-07 12:50:00 IST
  • அரசுப் பணிகளில் தலையிடுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
  • மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற ஆவன செய்ய வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் என அனைவரையும் மிரட்டி அரசுப் பணிகளில் தலையிடுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.

இந்த வகையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்தும் அரசுப் பணிகளில் அவர்களின் தலையீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளில் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, தனி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்து, மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News