தமிழ்நாடு செய்திகள்
சுதந்திர தின விழா: தமிழக போலீசார் 21 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது அறிவிப்பு
- செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
இதேபோல் சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக போலீசார் 21 பேருக்கு சிறந்த சேவைக்கான விருதும், 3 போலீசாருக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.