தமிழ்நாடு செய்திகள்

சுதந்திர தினத்தில் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-15 10:13 IST   |   Update On 2025-08-15 10:13:00 IST
  • 2-ம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.
  • ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் 1 மையம், மண்டல அளவில் 2 மையம், மாவட்டத்திற்கு 1 பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.

நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

சுதந்திர தினத்தை முன்னிட்டு 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

* விடுதலை போராட்ட தியாகிளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* விடுதலை போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* 2-ம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால நிதியுதவி ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.

* தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்காக மாதவத்தில் ரூ.22 கோடியில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.

* 2-ம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.

* தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவு செய்யப்படும்.

* ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் 1 மையம், மண்டல அளவில் 2 மையம், மாவட்டத்திற்கு 1 பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.

* கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்லூரியில் பயிலும்போது திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம் அறிவிப்பு

* கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் 10,000 பேருக்கு ரூ.15 கோடியில் இணைய வழியில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News