தமிழ்நாடு செய்திகள்

ஈஞ்சம்பாக்கத்தில் டாக்டர் வீடு உள்பட 2 இடங்களில் வருமான வரி சோதனை

Published On 2025-11-12 13:06 IST   |   Update On 2025-11-12 13:06:00 IST
  • வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
  • 2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சென்னை:

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணியில் வசித்து வருபவர் டாக்டர் சாமுவேல் காட்வின். சர்க்கரை நோய் சிறப்பு நிபுணரான இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையில் சோதனை நடத்தினார்கள். இதேபோன்று வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 2 பேர் வீட்டில் இருந்தும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News