'ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமலிருப்பதில் உள்நோக்கம் இருந்தால் அது தவறு' - கே.எஸ்.அழகிரி!
- தேர்தலை ஒட்டித்தான் இந்தாண்டு தீப விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்
- ஜனநாயகன் விவகாரம் குறித்து சட்டரீதியாக எனக்கு எதுவும் தெரியாது
ஜனநாயகன் படத்திற்கு உள்நோக்கத்தோடு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அது தவறு என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
"தேர்தலை ஒட்டித்தான் இந்தாண்டு தீப விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் மிகவும் அறிவார்ந்த மக்கள். இந்தத் திட்டத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரத்தில் பங்கு என்பதை விரும்புவார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கும்.
எல்லா வகையிலும் அதிமுக விளிம்புநிலைக்கு வந்துவிட்டது. அமித்ஷா ஒரு கருத்தை முன்வைக்கிறார். இபிஎஸ் ஒரு கருத்தை முன்வைக்கிறார். கூட்டணிக்குள் ஒரு தெளிவு இல்லை. ஜனநாயகன் விவகாரம் குறித்து சட்டரீதியாக எனக்கு எதுவும் தெரியாது. அப்படி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் அது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். சான்றிதழ் ஏன் வழங்கவில்லை என்ற காரணம் எனக்கு தெரியவில்லை. அப்படி உள்நோக்கம் இருந்தால் அது தவறு." என தெரிவித்தார்.