தமிழ்நாடு செய்திகள்
எனக்கு பாம்பு காது..! சபாநாயகரின் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
- தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நாம் கூப்பிட்டது சபாநாயகருக்கு கேட்கவில்லை என்றனர்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நாம் கூப்பிட்டது சபாநாயகருக்கு கேட்கவில்லை என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவு அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் இருக்கும் திசையை நோக்கி பார்த்தபடியே எனக்கு கேட்கவில்லை என்று நீங்கள் கூறியது எனக்கு கேட்டது. எனக்கு பாம்பு காது என்றார்.
இது அவையில் சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.