இந்தியா
null
இப்பொழுது நலமாக இருக்கிறேன் - ப.சிதம்பரம் பதிவு
- காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற ப.சிதம்பரம் திடீரென மயக்கமடைந்தார்.
- ப.சிதம்பரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற ப.சிதம்பரம் திடீரென மயக்கமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான் இப்பொழுது நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "கடும் வெயிலின் காரணமாக நீரிழப்பு (dehydration) ஏற்பட்டது; மருத்துவமனையில் எல்லாச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது நலமாக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.