உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் 48 கிராம மக்கள் சார்பில் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து அரிட்டாபட்டி கிராம மக்கள் பெருமூச்சுவிட்டனர்.
இதைதொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 32 பேர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று காலை நேரில் சந்தித்தனர்.
இந்த குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை அல்லது அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கவுரவிக்கப்படுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் 48 கிராம மக்கள் சார்பில் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு மூலம் அரிட்டாபட்டிக்கு தான் செல்லயிருப்பதை உறுதி செய்தார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்..!" என்றார்.