தமிழ்நாடு செய்திகள்

திமுக கூட்டணியில் ஓட்டை..!- அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச் செல்வன்

Published On 2025-06-18 17:58 IST   |   Update On 2025-06-18 17:58:00 IST
  • திருச்சியில் திருமாவளவனை வைகைச் செல்வன் சந்தித்து பேசியுள்ளார்.
  • சந்திப்பு குறித்து கேள்விக்கு திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது என பதில் அளித்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வைகைச் செல்வனிடம், திருமாவளவன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகைச் செல்வன், "திமுக கூட்டணியில் தற்போது ஓட்டை விழுந்துள்ளதாகவும் இதற்கான பதில் விரைவில் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

அந்த ஓட்டைக்காகத்தான் திருமாவளவனை சந்தித்தீர்களா? என்ற கேள்விக்கு, "இப்போது என்னால் இவ்வளவுதான் கூற முடியும். உங்களுக்கு நான் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறேன்" என பதில் அளித்தார்.

மதச்சார்பின்மை காப்போம் என்ற பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. அப்போது வைகைச் செல்வன் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார்.

Tags:    

Similar News