தமிழ்நாடு செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
- தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று குறைந்துள்ளது. நீர்வரத்தானது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்துள்ளது.
இருப்பினும், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.