தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

Published On 2025-06-06 08:33 IST   |   Update On 2025-06-06 08:33:00 IST
  • நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6000 கன அடியாக வந்தது.
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

தருமபுரி:

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6000 கன அடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரத்து 500 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News