தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - குளிக்க தடை விதித்த மாவட்ட நிர்வாகம்

Published On 2025-06-20 13:59 IST   |   Update On 2025-06-20 13:59:00 IST
  • 9 மணிநிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
  • கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பால் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கனஅடியாக வந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது. 9 மணிநிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக அதிகரித்ததால் ஆற்றில், நீர் வீழ்ச்சியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பால் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News