தமிழ்நாடு செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று 3 ஆயிரம் கனஅடியாகவும் வந்தது.
- கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று 3 ஆயிரம் கனஅடியாகவும் வந்தது.
இந்த நிலையில், கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது வினாடிக்கு சுமார் 6000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.