தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் - ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

Published On 2026-01-06 11:21 IST   |   Update On 2026-01-06 11:21:00 IST
  • ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும்
  • தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.

தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும்.

* மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் மலை உச்சியில் உள்ள தூணில் கோவில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும்.

* ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும்

* தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.

* தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம்.

* மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் தனி நீதிபதி அளித்த உத்தரவை உறுதி செய்தனர்.

Tags:    

Similar News