null
கனமழை எதிரொலி: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உதவி எண்கள் அறிவிப்பு
- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு புகாரளிக்க உதவி எண்கள் அறிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அவசர தேவைகளுக்கு 1077, 04343-234444 என்ற எண்களை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.